டார்ஜிலிங்கில் முழு அடைப்பு! இயல்பு நிலை பாதிப்பு!

செவ்வாய், 17 ஜூன் 2008 (12:52 IST)
கூர்க்கா லேண்ட் என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி போராடிவரும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா நடத்திவரும் முழு அடைப்பால் டார்ஜிலிங் மாவட்டத்தில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவின் இந்த முழு அடைப்பு - வேலை நிறுத்தத்தால் சில்லிகுரியையும், சிக்கிம் தலை நகர் காங்க்டாக்கையும் இணைக்கும் தேச நெடுஞ்சாலை 31ஏ-யில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்கிம் மாநிலம் தேசத்தின் மற்ற பகுதிகளில் இருந்து போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. சில்லிகுரிக்கும் டார்ஜிலிங்கிற்கும் இடையில் ஓடும் மலை இரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றலாப்பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்