குஜ்ஜார்கள் பிரச்சனை : மாநில அரசே தீர்வு காணலாம் - மத்திய அரசு!

ஞாயிறு, 8 ஜூன் 2008 (14:01 IST)
தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டம் நடத்திவரும் குஜ்ஜார்கள் பிரச்சனையில் மாநில அரசே தீர்வு காணுமாறு மத்திய அரசு கூறியுள்ளது!

ராஜஸ்தான் மாநிலத்தில் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி தொடர் போராட்டத்திலும், மறியலிலும் குஜ்ஜார்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜ்ஜார்கள் இடஒதுக்கீடு பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் பி.ஆர். ‌கிண்டியா முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பட்டியலில் இடம்பெறாத வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்றும், குஜ்ஜார்கள் பிரச்சனையில் மாநில அரசே தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்