குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மோர்பி என்ற ஊருக்கு அருகேயுள்ள செராமிக் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி 6 தொழிலாளர்கள் பலியானார்கள்.
கோமெட் செராமிக் தொழிற்சாலையில் பாதாள கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய அதில் இறங்கிய 6 துப்பரவுப் பணியாளர்கள் விஷ வாயு தாக்கி பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மயக்கமடைந்திருப்பதாக இந்த 6 பேரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியிலேயே அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.