மேற்கு வங்கம், கேரளா : இயல்பு நிலை பாதிப்பு!

வியாழன், 5 ஜூன் 2008 (12:38 IST)
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், கேரளா ஆகிய மா‌நிலங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மேலும் வேலை நிறுத்தம் காரணமாக கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகளும் பாதிப்படைந்துள்ளன. காட்மண்டூவிற்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்