பொருளாதார பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துள்ளது மத்திய அரசு!

புதன், 4 ஜூன் 2008 (15:56 IST)
ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலக்கில்லாமல் செயல்படுகிறது என்றும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாய் விலைகளை அதிகரித்ததன் மூலம் நாட்டு மக்கள் மீது பொருளாதார பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

"அரசின் இந்தச் செயல் நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைப்பதாகும், பணவீ‌க்கம், விலை உயர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதாக பிரதமர் இதுவரை கூறிவந்ததெல்லாம் வெறும் கட்டுக் கதைகளே என்பதை நிரூபித்துள்ளது" என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"சாமானிய மக்களின் சவப்பெட்டியின் மீது மத்திய அரசு அடித்துள்ள கடைசி ஆணி" இதுவென்று அவர் மேலும் குற்றம்சாட்டினார்.

இடது சாரிகள் மீதும் தாக்குதல் தொடுத்துள்ள ரூடி, "பெட்ரோல் விலை அதிகரிக்கும் முக்கிய முடிவில் பங்கேற்ற இவர்கள் தற்போது எதிர்ப்பது போல் இரட்டை வேஷம் போடுகின்றனர் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்