குஜ்ஜார்கள் மீண்டும் ரயில் மறியல்!
செவ்வாய், 3 ஜூன் 2008 (14:05 IST)
ராஜஸ்தான் மாநிலம் டெளசா மாவட்டத்தில் இன்று குஜ்ஜார்கள் போராட்டத்தினால் ரயில் போக்குவரத்த கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் கூடுதலாகத் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தங்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கேட்டு குஜ்ஜார் இனத்தவர் கடந்த மாதம் 24 ஆம் தேதி நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறைகளிலும், அதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
பலியானவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு அவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாவ் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், அரசு நடத்திய சமரசப் பேச்சையடுத்து உறவினர்களின் ஒப்புதல் அடிப்படையில் பலியானோர் உடல்கள் நேற்றிரவு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.
இதற்கிடையில் நேற்றிரவு முதல் பரத்பூர், டெளசா மாவட்டங்களில் ஏற்கெனவே போராட்டம் நடத்திய அதே இடத்தில் குவிந்த குஜ்ஜார்கள் ரயில் மறியலில் ஈடுபட்டள்ளனர். இதனால் டெல்லி- ராஜஸ்தான் பாதையில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் காவல் படையினர், துணை ராணுவப் படையினர், மாநிலக் காவலர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் கூடுதலாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.