இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (டி.ஆர்.டி.ஓ.) தயாரிக்கப்பட்ட பிருதிவி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது.
150 முதல் 250 கி.மீ. வரையிலான தரை இலக்குகளை தாக்கவல்ல, சுமார் 1000 கிலோ கிராம் எடை வரையிலும் வெடிபொருட்களை தாங்கிச் செல்ல வல்லதுமான பிருதிவி ஏவுகணை, ஒரிசா மாநிலம், பலாசூர் மாவட்டம் சந்திபூர் தீவிலுள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்திலிருந்து இன்று காலை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
உயர் தொழில் நுட்ப ஏவுகணையான பிருதிவி இன்று காலை 10.30 மணியளவில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணை திரவ மற்றும் திட எரிபொருள் இரண்டிலும் இயங்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய ராணுவம் ஏற்படுத்தியுள்ள சிறப்பு ஏவுகணை படை ஆகியவை இணைந்து இந்த சோதனையை நடத்தியுள்ளன.