மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது!

வியாழன், 15 மே 2008 (14:01 IST)
உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி தன் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை மத்திய புலனாய்வுக் கழக விசாரணைக்கு மாற்றியதை எதிர்த்தஉச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இந்த வழக்கை விசாரித்து இடைக்கால உத்தரவுகள் எதையும் பிறப்பிக்காமல் ஜூலை 14ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார்.

மாயாவதியின் இந்த மனுவின் மீதான மத்திய புலனாய்வுக் கழக‌‌த்‌தின் பதிலையும் உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.

2003ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மத்திய புலனாய்வுக் கழக‌ம் மாயாவதி மீது முதல் தகவலறிக்கை தாக்கல் செய்தது.

ஆனால் உச்ச நீதிமன்றம் மத்திய புலனாய்வுக் கழக விசாரணைக்குத்தான் உத்தரவிட்டதே தவிர முதல் தகவலறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறவில்லை என்றும் இதனால் அந்த முதல் தகவலறிக்கை சட்டவிரோதமானது என்றும் மாயவதி தரப்பு கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்