கர்நாடகாவில் 50 ‌விழு‌க்காடு வாக்குப்பதிவு!

சனி, 10 மே 2008 (18:06 IST)
கர்நாடக மாநில சட்டமன்ற‌த்‌தி‌ற்கு நடைபெறு‌ம் முதல்கட்ட தேர்தலில் இன்று மாலை 4 மணி வரை சுமார் 50 ‌விழு‌க்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

11 மாவட்டங்களில் 89 தொகுதிக‌ளி‌‌ல் நட‌ந்துவரு‌ம் வாக்குப்பதிவு பொதுவாக அமைதியான முறையில் நடைபெற்றது.

ஒரு சில இடங்களில் வாக்காளர் பட்டியலில் சில பெயர்கள் மாயமானதை எதிர்‌த்து சில வாக்குச் சாவடிகளில் ஆர்‌ப்பாட்டம் நடந்ததைத் தவிர பெரிய ச‌ம்பவ‌ங்கள் எதுவும் இல்லை.

58,000 பாதுகாப்பு படையினர் இந்த தேர்தலுக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் முன்னணி கட்சிகளான காங்கிரஸ், பாஜக, ஜனதாதளம்-எஸ் ஆகிய கட்சிகள் தனித்த பெரும்பான்மை பெறுவோம் என்று கூறியுள்ளன.

முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான எஸ்.எம். கிருஷ்ணா காங்கிரஸ் கட்சி 45 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் வெ‌‌ங்கையா நாயுடுவும் தங்கள் கட்சி தனித்த பெரும்பான்மை பெறும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்