அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து இடதுசாரி கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதில் தீவிரத்தை அதிகரித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தலைமையில் இடதுசாரித் தலைவர்கள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, அதிகரிக்கும் விலைகள் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களின் முன் பேர வர்த்தகம்தான் விலை உயர்வுக்கு காரணம் என்று இடதுசாரிக்கட்சிகள் கூறிவருகின்றன. எனவே அத்தியாவசிய பொருட்களின் முன்பேர வர்த்தகச் சந்தைக்கு தடை விதிக்கவேண்டும் கூறி வருகின்றன.
இது குறித்து விவாதிக்க இன்று பிரதமரை சந்திக்கும் இடதுசாரித் தலைவர்கள், பொது வினியோக முறை குறித்தும் கேள்விகளை எழுப்பவுள்ளதாக தெரிகிறது.