‌திபெ‌த்‌திய‌ர்க‌ளி‌ன் அமை‌தி‌ச் சுட‌ர் ஓ‌ட்ட‌ம்!

வியாழன், 17 ஏப்ரல் 2008 (13:40 IST)
டெ‌ல்‌லி‌யி‌ல் ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌ம் நடககு‌ம் அதே நேர‌த்‌தி‌ல் ‌திபெ‌த்‌தி‌ல் ‌சீன‌ப் படைக‌ளி‌ன் அட‌க்குமுறை நடவடி‌க்கைகளை‌க் க‌ண்டி‌த்து அமை‌தி‌ச் சுட‌ர் ஓ‌ட்ட‌‌த்தை திபெ‌த்‌திய‌ர்க‌ள் நட‌‌த்து‌கி‌ன்றன‌ர்.

திபெ‌த்‌திய ஒ‌ற்றுமை‌க்குழு ஏ‌ற்பாடு செ‌ய்‌திரு‌ந்த இ‌ந்த‌ச் சுட‌ர் ஓ‌ட்ட‌த்தை மு‌ன்னா‌ள் பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் ஜா‌ர்‌ஜ் ஃபெ‌ர்ணா‌ன்ட‌ஸ் துவ‌‌க்‌கி வை‌க்‌கிறா‌ர்.

அமை‌தி வ‌ழிபா‌ட்டுட‌ன் ரா‌ஜ்கா‌ட்டி‌ல் ஏ‌ற்ற‌ப்ப‌டு‌ம் அமை‌தி‌ச் சுட‌ர் ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் செ‌ல்லு‌ம் எ‌ல்லா பாதைக‌ளிலு‌ம் செ‌ல்‌கிறது. அ‌ப்போது ஹ‌ிமா‌ச்சல ‌பிரதேச‌ம், த‌ர்மசாலா ஆ‌‌கிய இட‌ங்‌க‌ளி‌ல் உ‌ள்ள ‌திபெ‌த்‌திய‌க் கலை மைய‌ங்களை‌ச் சே‌ர்‌ந்த குழு‌வின‌ரி‌ன் நடன ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் நட‌க்‌கி‌ன்றன.

திபெ‌‌த் அமை‌தி‌ச் சுட‌ர் ஓ‌ட்ட‌த்தை மு‌ன்‌னி‌‌ட்டு ஜ‌ந்த‌ர் ம‌ந்த‌ர், ரா‌ம் ‌லீலா மைதான‌ம், ர‌ன்‌ஜி‌த் ‌சி‌ங் மே‌ம்பால‌ம், டா‌‌ல்‌ஸ்டா‌ய் மா‌ர்‌க் ச‌ந்‌தி‌ப்பு, க‌ஸ்தூ‌ரிபா கா‌ந்‌தி மா‌ர்‌க், ஜ‌ன்ப‌த் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு பகு‌திக‌ளிலு‌ம் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்