ஜார்கண்டில் மத்திய சிறப்பு காவல் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இம்மாநிலத்திற்கு உட்பட்ட கார்வா மாவட்டத்தில் நேற்று இரவு மத்திய சிறப்பு காவல் படைகளுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில், எட்டு நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடிமருந்துகள் உட்பட அதிகளவில் வெடிபொருட்களும், ஆயுதங்களும் கைப்பற்றுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.