த‌ர்மசாலா‌வி‌ல் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் தொட‌ர்‌கிறது!

வெள்ளி, 28 மார்ச் 2008 (13:16 IST)
சீன அரசை‌க் க‌‌ண்டி‌த்து த‌ர்மசாலா‌வி‌ல் வ‌சி‌க்கு‌ம் ‌திபெ‌த்‌திய‌ர்க‌ள் காலமுறை அடி‌ப்படை‌யி‌ல் காலவரைய‌ற்ற உ‌ண்ணா‌விரத‌‌ப் போரா‌ட்ட‌ம் துவ‌ங்‌கியு‌ள்ளன‌ர்.

சீன‌ப் பொரு‌ட்களை எ‌தி‌ர்‌த்து நட‌த்‌திய போரா‌ட்ட‌த்‌தி‌ன் அடு‌த்த க‌ட்டமாக இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்தை‌த் துவ‌ங்‌‌கியு‌ள்ளதாக பு‌த்தமத‌த் துற‌விக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

"‌சீன‌ப் படைகளு‌க்கு எ‌திராக அமை‌தியான முறை‌யி‌ல் ‌திபெ‌த்‌தி‌ல் போராடி வரு‌ம் ‌திபெ‌த்‌திய‌ர்களு‌க்கு ஆதரவ‌ளி‌க்கு‌ம் வகை‌யிலு‌‌ம், எ‌ங்க‌ளி‌ன் ஒ‌ற்றுமையை வெ‌ளி‌ப்படு‌த்தவு‌ம் இ‌ப்போரா‌ட்ட‌த்தை‌த் துவ‌ங்‌கியு‌ள்ளோ‌‌ம்" எ‌ன்று தா‌ஷி எ‌ன்ற துற‌வி தெ‌ரி‌வி‌த்த‌ா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், கட‌ந்த 13 ஆ‌ம் தே‌தி த‌ர்மசாலா‌வி‌ல் இரு‌ந்து ‌திபெ‌த்‌தி‌ற்கு‌ள் நுழைய முய‌ன்றத‌ற்காக‌க் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட 3 ‌திபெ‌த் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் ‌விடு‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்