இணையதள வழி நட்பின் மூலம் தனது மாநிலத்தை சேர்ந்த பெண் ரூ.13 லட்சம் மோசடி செய்துவிட்டதாக அயல்நாடுவாழ் இந்தியர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
ஒரிசாவின் கென்தரபாரா மாவட்டத்திற்கு உட்பட்ட அனிபாரா கிராமத்தை சேர்ந்த ஜித்தேன்திரா குமார் நாயக் துபாயில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் அதே மாநிலத்திற்கு உட்பட்ட நாசிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவேரி பாட்ராவுக்கும் இணையதள வழியாக நட்பு ஏற்பட்டது.
'புவனேஸ்வரத்தை அடிப்படையாக கொண்ட 'பர்சான கன்சல்டன்சி சர்வீஸ்' மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர் என்று கூறிய காவேரி ரூ.13 லட்சத்தை கடனாக பெற்று ஏமாற்றியுள்ளதாக நாயக் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், 'வங்கி மூலமாக பண பரிவர்த்தனை நிகழ்ந்தது. பணத்தை பெற்றவுடன் காவேரி தொடர்பு கொள்வதை நிறுத்திக் கொண்டார்' என்று நாயக் கூறினார்.
இதுதொடர்பாக நாயக் ஒரிசா முதலமைச்சர் அலுவலகத்தில் புகார் செய்ததையடுத்து, பட்டமான்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.