விவாகரத்து கோருவதில் மும்பைப் பெண்கள் முதலிடம்

செவ்வாய், 18 மார்ச் 2008 (11:14 IST)
இந்தியா முழுவதிலும் விவாகரத்துக் கோருவதில் மும்பைப் பெண்கள் முதல் இடத்தில் உள்ளார்கள் என்று புதிய அரசு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரேணுகா செளத்ரி இதனைத் தெரிவித்தார்.

தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையை அவர் இன்று வாசித்தார். அதில், இந்தியாவில் 2005-06ஆம் ஆண்டில் விவாகரத்துக் கோரியதில் 0.4 விழுக்காடு பெண்கள் மும்பையைச் சேர்ந்தவர்கள். டெல்லியில் 0.2 விழுக்காடும். கொல்கட்டாவில் 0.1 மற்றும் சென்னையில் 0.2 விழுக்காடு பெண்களும் விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி விளக்கிட 10 நாள் முகாம் ஒன்று நடத்தப்பட உள்ளது. அது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களுக்கான முகாமாக அமையும் என்றும் ரேணுகா செளத்ரி கூறினார்.

மேலு‌ம், வேலை‌க்கு‌சசெ‌ல்லு‌ம் ‌சிறா‌ர்களையு‌ம், தெருவோர‌ச் ‌சிறா‌ர்களையு‌மகா‌க்கவு‌மப‌ல்வேறநல‌த்‌தி‌ட்ட‌ங்க‌ளசெய‌ல்படு‌த்த‌ப்படு‌மஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்