அணு ஒப்பந்தம் : அமெரிக்காவின் சுய நலத்தையே காட்டுகிறது - இடதுசாரி
சனி, 15 மார்ச் 2008 (11:43 IST)
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்ததை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று இந்தியாவிற்கு அமெரிக்கா நெருக்கதல் தருவது அதன் சுயநலத்தையே வெளிப்படுத்துகிறது என்று இடதுசாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கு முன்பே அமெரிக்கா இப்படிப்பட்ட நெருக்குதலைத் தருவது ஒரு மிரட்டலாகவே உள்ளது என்று கூறியுள்ள இடதுசாரிக் கட்சிகள், இப்பிரச்சினையில் வரும் மார்ச் 17ஆம் தேதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடது சாரிக் கட்சிகளம் இடம்பெற்றுள்ள கூட்டுக் குழுக் கூட்டத்திற்குப் பின்னரே எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.