சென்னை-இஸ்லாமாபாத் இடையே கூடுதல் விமான சேவை: பிரஃபுல் படேல்!
புதன், 12 மார்ச் 2008 (10:59 IST)
இந்தியா-பாகிஸ்தான் இடையே வாரம் 12 விமான சேவையை 28 விமான சேவையாக உயர்த்தவும் சென்னை- இஸ்லாமாபாத் இடையே கூடுதல் விமான சேவை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரஃபுல் படேல் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்த ராவல்பின்டியில் கடந்த பிப்ரவரி 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போதைய ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் மூன்று விமான நிறுவனங்களை போக்குவரத்திற்கு பரிந்துரை செய்யலாம். இதற்கு முன்பாக இந்தியா சார்பில் இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமே பாகிஸ்தான் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டது.
இதேபோல பாகிஸ்தான் சார்பில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், ஷகீன் ஏர் இன்டர்நேஷனல் மற்றும் ஏர்புளு ஆகிய மூன்று நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன என்று அமைச்சர் பிரஃபுல் படேல் கூறியுள்ளார்.