சப‌ரிமலை‌யி‌ல் வருடா‌ந்‌திர ‌விழா: 11 ஆ‌ம் தே‌தி நடை ‌திற‌ப்பு!

சனி, 8 மார்ச் 2008 (11:18 IST)
சப‌‌ரிமலஅ‌ய்ய‌ப்ப‌னகோ‌யி‌லி‌ல் வருடா‌ந்‌திர 10 நா‌ள் ‌விழா‌ வரு‌கிற 11 ஆ‌ம் தே‌தி துவ‌ங்கு‌கிறது.

இத‌ற்காக அ‌‌ன்று அ‌திகாலை மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி சன்னிதான நடையை‌த் திறந்து விளக்கேற்றுவார். மறுநாள் காலை கணபதி ஹோமத்துக்கு பிறகு தரிசனத்துக்கு அனுமதி வழ‌ங்க‌ப்படு‌ம்.

வரு‌கிற 11 ஆ‌ம் தே‌தி விழாவுக்கான கொடியை தந்திரி கண்டரரு மகேஸ்வரரு ஏற்றுகிறார். உற்சவ பலி 13 ஆ‌ம் தேதி தொடங்கி 20 ஆ‌ம் தேதி நிறைவடையும். 12 ஆ‌ம் தேதி முதல் 20 ஆ‌ம் தேதி வரை ஸ்ரீபூத பலியும் நடக்கிறது. மற்ற பூஜைக‌ள் வழக்கம் போல் நட‌க்கும்.

சரங்குத்தியில் 20 ஆ‌ம் தேதி நள்ளிரவு பள்ளிவேட்டையு‌‌ம், பம்பை நதியில் மறுநாள் 21 ஆ‌ம் தேதி சுவாமி அய்யப்பன் அவதரித்த பங்குனி உத்திரம் விழாவும், ஆராட்டுத் திருவிழாவும் நட‌க்கும்.

அ‌ன்று காலை 11 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் ஸ்ரீபலி பிம்பம் ஆராட்டுக் கடவுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அங்கு உச பூஜையும், ஆராட்டு பூஜையும் நட‌க்கு‌ம்.

பின்னர் பம்பை கணபதி சன்னதியில் சுவாமி வைத்திருக்கப்படும். பிறகு அங்கிருந்து சன்னதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவார்.

வெப்துனியாவைப் படிக்கவும்