35 வரலா‌ற்று‌ச் ‌சி‌ன்ன‌ங்க‌ள் அ‌ழி‌ந்து‌வி‌ட்டன!

புதன், 5 மார்ச் 2008 (11:06 IST)
நமது நா‌ட்டி‌ல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 35 சின்னங்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்டன என்று மாநிலங்கள் அவையில் அரசு தெரிவித்துள்ளது.

நகரமயமாதல், பலமாடிக் கட்டடங்கள் கட்டுவது, வளர்ச்சிப் பணிகள் போன்ற காரணங்களால் இந்த இடங்கள் அழிந்து விட்டதாக கலாசாரத் துறை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியுள்ளார்.

டெ‌‌ல்லி (12), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகண்ட் (3), ஜம்மு-காஷ்மீர் (3), குஜராத் (2), அருணாச்சல பிரதேசம் (1), அசாம் (1), கர்நாடகம் (1), ஹரியாணா (2), ராஜஸ்தான் (2) ஆகிய மாநிலங்களில் வரலாற்றுப் புகழ்மிக்க சின்னங்கள் அழிந்து விட்டதாக அவர் கூறினார்.

மத்திய அரசால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள் உள்ள இடங்களை யாரும் ஆக்கிரமிக்காமல் தடுக்க அந்த இடத்தில் வேலி அமைக்கப்படும் எ‌ன்று‌ம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 3,667 சின்னங்களை மத்திய அர‌சி‌ன் தொல்பொருள் ஆய்வு துறை பராமரித்து வருவதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர் அம்பிகா சோனி.

வெப்துனியாவைப் படிக்கவும்