மேகாலயா‌வி‌ல் நாளை சட்டமன்ற தேர்தல்

ஞாயிறு, 2 மார்ச் 2008 (14:51 IST)
ேகாலயா மா‌நில‌த்‌‌தி‌ற்கான ச‌ட்டம‌ன்ற‌த் தே‌ர்த‌ல் வா‌க்கு‌ப்ப‌திவு நாளை நடைபெற உ‌ள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌ன் வட‌கிழ‌க்கு மா‌நிலமான மேகாலயா‌வி‌ல் த‌ற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கா‌ங்‌கிர‌ஸ் ஆ‌ட்‌சி‌யி‌ன் பதவி காலம் முடிவதை அடுத்து அ‌‌‌ம்மா‌நில ச‌ட்ட‌ம‌ன்ற‌த் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தே‌ர்தலு‌க்கான பிர‌ச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்தது.

நாளை அ‌ங்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. மொத்தமு‌ள்ள 60 தொகுதிக‌ளி‌ல், ஒரு தொகுதி வேட்பாளர் இறந்ததை அடுத்து 59 தொகுதிகளில் ம‌ட்டு‌ம் தேர்தல் நடக்கிறது.

தேர்தலையொ‌ட்டி மாநிலம் முழுவதும் பலத்த காவ‌ல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய கூடுத‌ல் காவ‌ல்துறை‌யினரு‌ம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்