சேது திட்டத்திற்கு சர்வதேச விதிகளின்படி தீர்வு : அம்பிகா சோனி!
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (17:05 IST)
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான சிக்கலிற்கு தீர்வு காணும்போத ு, இதில் தொடர்புடைய அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சர்வதேச விதிகள ், உணர்வுகளுக்குப் பொருந்தக் கூடிய முடிவையே மத்திய அரசு எடுக்கும் என்று மத்தியக் பண்பாட்டுத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார். மத்திய அரசுக்கு ஆதரவளித்தும் வரும் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான கட்சிகள ், சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், ரூ.2,400 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு ஒப்புக் கொள்ளுமா என்று கேட்டதற்கு அம்பிகா சோனி பதிலளிக்க மறுத்துவிட்டார். அதேபோ ல, சர்ச்சைக்குரிய ராமர் பாலம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதா அல்லது இயற்கையாக அமைந்ததா என்பது குறித்து தொல்லியல் துறை ஆய்வு நடத்த மத்திய அரசு உத்தரவிடுமா என்பதற்கும் அவர் பதிலளிக்கவில்லை. இது குறித்து டெல்லியில் பி.ட ி. ஐ. செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில ், " என்னால் கருத்துக் கூற முடியவில்லை... ஆனால ், இத்திட்டத்தில் தொடர்புடைய அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சர்வதேச விதிகள் மற்றும் உணர்வுகளுக்குப் பொருந்தக் கூடிய முடிவையே நாங்கள் விரும்புகிறோம ். இவ்விடயத்தில் முடிவெடுக்கும் போது எல்லாத் தரப்பினரின் கருத்துக்களையும் மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும ்" என்று நழுவலாகப் பேசினார். புனிதமான ராமர் பாலத்தை சேது சமுத்திரத் திட்டம் சேதப்படுத்துகிறது என்று ஹிந்து அமைப்புகள் கிளப்பியுள்ள சர்ச்சைகளால் மத்திய அரசு மாற்று வழிகளைத் தேடுமா என்றும ், தற்போதுள்ள சர்ச்சையான சூழலில் இருந்து வெளியேறுவதற்காக தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடப்படுமா என்றும் அம்பிகா சோனியிடம் கேட்கப்பட்டது. மேலும ், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட் ட, கடவுள் ராமர் உட்பட ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையானவை என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டிருந்த வாக்குமூலத்த ை, கடுமையான அழுத்தத்தில் சிக்கியதால்தான் மத்திய அரசு திரும்பப் பெற்றது என்ற குற்றச்சாற்றுகளையும் அம்பிகா சோனி திட்டவட்டமாக மறுத்தார். "அது தவறான வாக்குமூலம் என்பதினால் அதைத் திரும்பப் பெறுவதற்கு அரசின் தலைமை முடிவு செய்தது. நீங்கள் ஒரு வாக்குமூலத்தைத் தாக்கல் செய்யும்போத ு, அது மிகச் சரியானதாகவும ், புனிதத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டியது அவசியம் இல்லைய ா" என்றார் அவர். உச்ச நீதிமன்றத்தில் தவறான வாக்குமூலம் தாக்கல் செய்யப்படுவதற்க ு, கவனக்குறைவோ அல்லது மற்ற காரணங்களோ இருக்கலாம் என்றார் அம்பிகா சோனி. பண்பாட்டுத் துறை அமைச்சகமும ், இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனமும் தங்கள் கருத்துக்களை அமைச்சரவைச் செயலரிடம் எழுத்துபூர்வமாக அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் கூறுகையில ், " கூடுதல் கருத்துக்கள ், ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றுக்காக அமைச்சரவை எங்களை நாடும் போத ு, நாங்கள் மேற்கொண்டு தலையிடுவோம். நான் எதையும் தன்னிச்சையாகக் கூற விரும்பவில்ல ை" என்றார். ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும ், தேசிய முக்கியத்தவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு பொது நல வழக்குகள் பற்றிக் கூறுகையில ், " அவை பற்றிக் கருத்து கூறுவது மிகக் கடினமானது. ஒவ்வொரு மனுவிலும் ஒவ்வொரு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளத ு" என்றார். சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் தன்னுடைய அமைச்சகம் தன்னிச்சையாக எந்தப் பரிந்துரையையும் வழங்கவில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்திய அம்பிகா சோன ி, " பண்பாட ு, கப்பல் போக்குவரத்த ு, சட்டத் துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு வாக்குமூலத்தைத் தயாரிப்பதற்காக கடந்த ஜனவரி 13 இல் அமைச்சரவைச் செயலரிடம் பிரதமர் மன்மோகன் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாங்கள் எங்கள் நிலையை எழுதி அளித்தோம ்" என்றார். இறுதியாக 'ராமர் பாலம ்' என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதா இல்லையா என்று கேட்டதற்க ு, குறிப்பிட்ட பகுதியில் அகழ்வாய்வு செய்யும்படி தொல்லியல் ஆய்வுத் துறை இதுவரை கேட்டுக் கொள்ளப்படவில்லை என்றார். "நாசா செயற்கைக்கோள் படங்கள ், விண்வெளி ஆய்வு மையப் படங்கள ், இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனம் அளித்த தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே நாங்கள் கருத்து கூற முடியும். இந்த விவரங்களை வைத்துப் பார்க்கையில ், அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்பு எதுவும் இல்லை." என்றார் அம்பிகா சோனி. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பணிகள் நடக்குமிடத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட வல்லுநர் குழு வழங்கிய ஆலோசனை பற்றிக் கருத்துக் கேட்டதற்க ு, " அதற்கு வாய்ப்பில்லை என்று கூறும் விதிகளை மேற்கோள் காட்டி நாங்கள் பதிலளித்துள்ளோம். ஏனெனில ், வணிக ரீதியாகத் தோண்டுவதென்பத ு, தொல்லியல் ஆய்வுக்குத் தோண்டுவதில் இருந்து வித்தியாசமானது என்பதால ், சேது சமுத்திரத் திட்டப் பணிகளை தொல்லியல் ஆய்வாளர் கண்காணிப்பது எங்களுக்குத் தேவையில்ல ை" என்றார். சர்வதேச விதிகளின்படி இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்கள் அகழ்வாய்வு நடத்தினால் மட்டுமே மிகச்சரியான உண்மை வெளிவரும் என்றார் அம்பிகா சோனி.
செயலியில் பார்க்க x