கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகருக்கான ஹஜ் புனித யாத்திரை விமானம் உட்பட அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஷேயிக்-உல்-ஆலம் விமான நிலையத்தில் இருந்து இரண்டு ஹஜ் விமானம் மற்றும் ஒரு இந்திய ஏர்லைன் விமானம் இன்று காலை புறப்பட இருந்தது. ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவு இருந்து வருவதால், சில மீட்டர் தூரத்தில் உள்ளவையே பார்வைக்கு எட்டப்படவில்லை. இதனால் ஸ்ரீநகருக்கு வரவேண்டிய மற்றும் அங்கிருந்து செல்ல வேண்டிய அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் விமானங்களை தரையிறக்குவது பாதுகானது அல்ல என்பதால் ஹஜ் விமானங்கள் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் 400க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் இன்று ஜெட்டாவில் இருந்து புறப்படும் சிறப்பு விமானங்களில் வீடு திரும்புகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.