மோடி ஆதரவு விளம்பரத்தினால் ரூ.200 கோடி வருவாய்!
வியாழன், 17 ஜனவரி 2008 (14:00 IST)
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தபோது நரேந்திர மோடியைப் புகழ்ந்தது மூலம் தொலைக் காட்சி சானல்களுக்கு 200 கோடிக்கும் அதிகமான வருவாய் விளம்பரங்கள் வாயிலாக கிடைத்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது! இந்த ஆய்வு கடந்த 2007, அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் குஜராத் தேர்தலையொட்டி தொலைக் காட்சி சானல்களில் வெளியான விளம்பரங்கள ், தேர்தல் பிரச்சாரங்களின் ஒளிபரப்புகளை கணக்கில் கொண்டு நடத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் சானல்கள் போட்டி போட்டுக் கொண்டு 6,063 வகையான படக்காட்சிகளை மொத்தம் 18 லட்சத்து 3 ஆயிரத்து 783 விநாடிகள் அல்லது 20 மொத்த நாட்கள் அளவுக்கு ஒளிபரப்பியுள்ளன. இத்தேர்தலுக்கு விளம்பர செலவு மட்டும் 206 கோடியே 19 லட்சத்து 9 ஆயிரத்து 600 செலவிடப் பட்டுள்ளதாக ஈசா ஒளிபரப்பு கண்காணிப்பு எனும் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. என்.டி.டி.வி. முதலிடம்! குஜராத் தேர்தல் தொடர்பான விளம்பரங்களைமொத்தம் 110 சானல்கள் பெற்றுள்ள நிலையில ், என்.டி.டி.வி. இந்தியா மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 673 விநாடிகள் மோடிக்கு ஆதரவான விளம்பரங்களை ஒளிபரப்பியதன் மூலம் 39 கோடியே 36 லட்சத்து 11 ஆயிரத்து 400 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து சகாரா சமாய் 2,15,342 விநாடிகள் விளம்பர ஒளிபரப்பு மூலம் 26 கோடியே 91 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாயும ், இ.டி.வி. குஜராத்தி 1,90,411 விநாடிகள் ஒளிபரப்பு மூலம் 19 கோடியே 4 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயும ், லைவ் இந்தியா 1,30,749 விநாடிகள் ஒளிபரப்பு மூலம் 6 கோடியே 53 லட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபாயும் விளம்பர வருவாயை ஒரு மாதத்திற்குள் ஈட்டியுள்ளன. இந்த ஆய்வுக்காக மேற்கண்ட காலத்தில் மொத்தம் 110 சானல்களின் ஒளிபரப்பு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு அந்த அடிப்படையிலேயே இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குஜராத் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேர்தல் தொடர்பான தலைவர்களின் பிரச்சாரங்கள ், விளம்பர வாசகங்கள் ஒளிபரப்ப ு, எழுப்பப்பட்ட பிரச்சனைகள் தொடர்பான விவாதங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் குஜராத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களான நரேந்திர மோட ி, எல்.கே.அத்வான ி, பிரதமர் மன்மோகன் சிங ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்த ி, ராகுல் காந்த ி, தின்ஸா பட்டேல ், மோடிக்கு எதிராக களம் இறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்டவர்கள் தொடர்பான விளம்பரங்கள ், விவாதங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதங்களில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்ற முகமது அப்சல் தொடர்பான விவாதம் பெரும்பாலான சானல்களில் இடம் பெற்றது. இத் தேர்தலில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள ், தேர்தல் தொடர்பான ஒளிபரப்புகளை மேற்கொண்ட 110 சானல்களையும் அதிக நேயர்கள் பார்க்கும் நேரம ், குறைந்த நேயர்கள் பார்க்கும் நேரம் என தேதி வாரியாக பிரித்து கணக்கிட்டுள்ளனர். வணிக தொலைக் காட்சிகளில் அதிக நேயர்கள் பார்க்கும் நேரம ், காலை 10 மணி முதல் மாலை 4 மண ி, இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் என்றும ், பிற தொலைக் காட்சிகளைப் பொறுத்த மட்டில் இரவு 7 மணி முதல் 11 மணி வரை என்றும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். என்.டி.டி.வி. இந்தி சானல் அதிக மக்கள் பார்க்கும் நேரங்களில் 2,18,673 விநாடிகள் மோடி ஆதரவு விளம்பரங்களை ஒளிபரப்பியதன் மூலம் மற்ற தொலைக் காட்சி சானல்களை விட அதிகமாக 10 கோடியே 82 லட்சத்து 3 ஆயிரத்து 400 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. மற்ற நேரத்திலும் இந்த சானலே மிக அதிகமாக 1,11,090 விநாடிகள் விளம்பரங்களை ஒளிபரப்பி 19 கோடியே 99 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஈசா ஒளிபரப்பு கண்காணிப்பு நிறுவனம் நாட்டில் உள்ள இத்துறையின் கண்காணிப்பு நிறுவனங்களில் முதன்மையானதாக விளங்கி வருகிறது. 90 -க்கும் மேற்பட்ட சானல்களை கண்காணித்து வருகிறது. அண்மைக் காலமாக இந்நிறுவனம் தனது பணியை பண்பலை வானொலி ஒளிபரப்ப ு, பிற இந்திய மொழிகளான தமிழ ், மலையாளம ், கன்னடம ், தெலுங்க ு, குஜராத்த ி, பெங்கால ி, இந்த ி, மராத்த ி, மற்றும் ஆங்கில மொழி ஒலி - ஒளி பரப்புகளையும் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.
செயலியில் பார்க்க x