சப‌ரிமலை‌யி‌ல் இ‌ன்று மகரஜோ‌தி த‌ரிசன‌ம்: ல‌ட்ச‌க்கண‌க்காண ப‌க்த‌ர்க‌ள் கு‌வி‌ந்தன‌ர்!

திங்கள், 14 ஜனவரி 2008 (09:20 IST)
சபரிமலையில் இ‌ன்று மகரஜோதி தரிசனம் காண நா‌ட்டி‌னப‌ல்வேறபகு‌திக‌ளி‌லஇரு‌ந்து‌மலட்சக்கணக்கான பக்தர்கள் கு‌வி‌ந்து‌ள்ளன‌ர்.

நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்புக்கும் காவ‌ல்துறை‌யின‌ர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். அதன்படி பிற்பகலுக்கு மேல், அடிவாரத்தில் இருந்து மலைக்கு நடந்து செல்ல தடை விதிக்கப்படும். அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் புனித நகைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பணி ‌சி‌க்க‌லி‌ன்‌றி நட‌க்க வேண்டும் என்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மகரஜோதியை மரங்களிலோ, பந்தலிலோ, கட்டிட உச்சியிலோ ஏறி பார்க்க வேண்டாம் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மகரஜோதியை மு‌ன்‌னி‌ட்டு, சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மலை உச்சியில் மட்டும் 3 ஆயிரம் காவ‌ல‌ர்க‌ள் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், அதிரடிப்படை‌யின‌ர், வெடிகுண்டு நிபுணர்கள் என 200 பேர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். மலை அடிவாரமான பம்பையில் முக்கிய இடங்களில் மெட்டல் டிடெக்டர்கள், ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

திருவாபரஊ‌ர்வல‌ம்!

மகரஜோதி பூஜைய‌ன்று சுவாமி அய்யப்பனுக்கு அணிவிப்பதற்கான திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகள் பந்தளத்தில் இருந்து சபரிமலை சன்னிதானம் நோக்கி நே‌ற்று ஊர்வலமாக புறப்பட்டது.

பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு, மேள-தாளங்களுடனும், பக்தர்களின் சரண கோஷங்களுடனும் திருவாபரண ஊர்வலம் தொடங்கியது. பந்தளம் பெரிய ராஜாவின் பிரதிநிதியான திருவாதிரை திருநாள் ராகவ வர்மராஜா இந்த ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். 18 பேர் அடங்கிய குழுவினர் தலைச்சுமையாக இந்த திருவாபரண பெட்டிகளை சுமந்து சென்றனர். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.

நாளை மாலை 6 மணிக்கு இந்த ஊர்வலம் சன்னிதானத்தை அடையும். அப்போது தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, மேல்சாந்தி டி.கே.கிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் பாரம்பரிய முறைப்படி திருவாபரணப் பெட்டியை பெற்றுக்கொள்வார்கள். பின்னர் அதனை கோவில் கருவறைக்குள் கொண்டு சென்று, மாலை 6.30 மணிக்கு சுவாமி அய்யப்பனுக்கு திருவாபரணங்களை அணிவிப்பார்கள்.

இதையடுத்து, திருவாபரணங்களுடன் சுவாமி அய்யப்பனுக்கு மாலை 6.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். அந்த நேரத்தில் காந்தமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் கிடைக்கும். இந்த ஜோதி தரிசனத்தைக் காண, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

மு‌ன்னதாக, சூரியன் தனூர் ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறும் நேரத்தில், திருவாங்கூர் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய்யால், அ‌ய்யப்பனுக்கு மகர சங்கராந்தி நெய் அபிஷேகம் நடத்தப்படும். மாலையில் கோயில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பிம்பசுத்தி பூஜை நடைபெறும்.

பே‌ட்டை து‌ள்ள‌ல்!

சப‌ரிமலை‌யி‌‌ல் மகரஜோதி உற்சவத்துக்காக கடந்த டிச‌ம்ப‌ர் 30-ஆம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட்டு, டிச‌ம்ப‌ர் 31-ஆம் தேதி முதல் பூஜைகள் தொடங்கின.

ஜனவ‌ரி 10-ஆம் தேதி எருமேலியில் உள்ள வாபர் மசூதியில் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை எருமேலி பேட்டை துள்ளல் வசந்தவிழா நடைபெற்றது. காலையில் வானில் கருடன் வட்டமிட அம்பலப்புழா பக்தர்கள் பேட்டை துள்ளினர்.

நெற்றிப் பட்டம் கட்டிய யானைகள் அணிவகுக்க ஸ்ரீ கிருஷ்ணர் விக்ரகம், அ‌ய்யப்பன் விக்ரகம் ஊர்வலமாகப் பவனிவர, திரளான பக்தர்கள் அ‌ய்யப்பனுக்கு பேட்டை துள்ளி மணிமாலா நதியில் நீராடி பெருநடை பாதை வழியாக சபரிமலைக்குப் பயணத்தைத் தொடக்கினர்.

வெள்ளிக்கிழமை மாலை ஆலங்காடு சிவ பக்தர்கள் சூலாயுதம், சிவன், அ‌ய்யப்பன் விக்ரகங்களுடன் பேட்டை துள்ளினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்