பெண்கள் அயல்நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்க புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி கூறினார்.
இது தொடர்பாகச் சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"பெண்கள் அயல்நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்க புதிய சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். இதற்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். 11-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது."என்றார்.