இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையிலிருந்து 'சோசியலிசம்' என்ற வார்த்தையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
'சோசியலிசம்' என்ற வார்த்தை கம்யூனிசத்தை குறிப்பதாக இருப்பதால் அதனை நீக்க வேண்டும் என்று, கொல்கட்டாவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, "சோசியலிசம்' என்ற வார்த்தையை கம்யூனிசம் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. அனைவருக்கும் நல்வாழ்வு அமைய வேண்டும் என்பதே 'சோசியலிசம்' என்ற வார்த்தையின் பொருள். அந்த வார்த்தை ஜனநாயகத்தின் முகத்தைப் பிரதிபலிக்கிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.