நமது நாட்டில் 3 -ல் இரண்டு பங்கு வீடுகளில் கழிவறை வசதியில்லை!

புதன், 12 டிசம்பர் 2007 (16:02 IST)
நம் நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு வீடுகளில் கழிவறை, குளியலறை இல்லை என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், உறுப்பு நாடுகள் புத்தாயிரத்து ஆண்டின் இலக்குகளை எட்ட திட்டங்களைத் தீட்டி செயல்பட முடிவெடுக்கப்பட்டது.

இந்த வகையில் இந்தியாவில் புத்தாயிரத்து ஆண்டின் இலக்குகளில், பாதுகாப்பான கழிவறை வசதியும் ஒன்றாகும். நம்நாட்டில் கடந்த 1991 -மஆண்டில் 23.7 விழுக்காடு இல்லங்களில் இருந்த குளியலறை, கழிவறை வசதி 2001 -மஆண்டில் 36.1 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மிக அதிக அளவில் உள்ள வறுமை, உணவின்மையை அகற்றுவது, ஆரம்ப கல்வியை அனைவருக்கும் விரிவுப்படுத்துவது, பாலின சமத்துவத்தையும் - பெண்கள் தன்னிறைவு பெறுவது, சிசு மரணத்தைக் குறைப்பது, பேறுகால மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது, ஹெச்.ஐ.வி , எய்ட்ஸ், மலேரியா, உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்துவது, வாழ்வியலுக்கு ஏற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவது, வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படுவது என்று புத்தாயிரத்து ஆண்டின் முதல் 15 ஆண்டுகளுக்குள் மேற்கண்ட 8 இலக்குகளை நிறைவேற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.

புத்தாயிரத்து ஆண்டின் இலக்குகளை எட்ட கால நிர்ணயம் வகுக்கப்பட்டுள்ள நிலையில் அதனைச் செயல்படுத்துவதில் பெரிய அளவுக்கு தடைகள் எதுவும் இருக்காது என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த இலக்குகளில் மனிதனின் அத்தியாவசியத் தேவைகளான தங்குமிடம், பெண்களுக்கென்று தனியாக கழிவறை வசதி ஆகியவை குறிப்பிடப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புத்தாயிரத்து ஆண்டின் இலக்குகளான 8 இலக்குகளையும் நிறைவேற்ற 189 நாடுகள் ,18 திட்டங்களின் கீழ் 48 வகையான அடிப்படை பணிகளை மேற்கொள்ள உள்ளன. புத்தாயிரத்து ஆண்டின் இலக்குகள் நமது 5 ஆண்டு திட்டங்களின் இலக்குகளை ஒத்து இருப்பதால் தனியாக இதனைச் செயல்படுத்த திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பு, சிசு மரணம், பேறுகாலங்களில் ஏற்படும் சிசு மரணம், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆகியவை தொடர்பாக அரசு மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்தான 11 -வது ஐந்தாண்டு திட்டத்தின் வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ளவை புத்தாயிரத்து ஆண்டின் இலக்குகளை விட மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நம் நாட்டில், ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான அளவு ஆண்டின் அனைத்து நாட்களிலும் உணவு கிடைக்கும் விகிதம் கடந்த 1993 - 94 மற்றும் 2004 - 05 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 94.5 விழுக்காட்டிலிருந்து 97.4 விழுக்காடாக கிராமப்புறங்களிலும், 98.1 விழுக்காட்டிலிருந்து 99.4 விழுக்காடாக நகர்புறங்களிலும் அதிகரித்துள்ளதாகவும், குழாய், அடிபம்பு, கிணறு ஆகியவற்றில் இருந்து குடிநீர் பெறும் இல்லங்களின் எண்ணிக்கை கடந்த 1991 -ல் 62.3 விழுக்காடாக இருந்தது. 2001 -மஆண்டில் 78 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் விகிதம் கடந்த 1993 - 94 -ம் நிதியாண்டில் இருந்த 36 விழுக்காட்டில் இருந்து 2004 - 05 -ம் நிதியாண்டில் 27.5 விழுக்காடாக குறைந்துள்ளதாக இந்திய திட்டக் குழு கணித்துள்ளது. இது உலக வங்கி நிர்ணயித்துள்ள வரையறைக்கு உட்பட்டது என்றும் கூறப்படுகிறது.

பள்ளிகளில் இருந்து பாதியில் படிப்பைக் கைவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை 2001 - 02 -ஆமகல்வியாண்டில் 3.20 கோடியாக இருந்தது 2005 - 06 -ஆம் கல்வியாண்டில் 71 லட்சமாக குறைந்துள்ளது. கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 1991 -லஇருந்த 52.2 விழுக்காட்டிலிருந்து 2001 -ல் 64.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

கடந்த 1990-91 மற்றும் 2004-05 -க்கஇடைப்பட்கல்வியாண்டுகளிலஆண் - பெண் குழந்தைகள் ஆரம்ப பள்ளிகளில் சேரும் விகிதம் 71:100 என்ற அளவில் இருந்து 88 : 100 என்ற அளவிற்கும், மேல்நிலைப் பள்ளியில் சேரும் விகிதம் 50 : 100 என்ற நிலையில் இது 71 : 100 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 1990 -லஆயிரத்துக்கு 80 குழந்தைகளாக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 2005ஆம் ஆண்டில் 58 ஆக குறைந்துள்ளது. இதேபோன்று பேறுகாலத்திின் போது குழந்தைகளின் இறப்பு விகிதம் 1998லஒரலட்சத்துக்கு, 407 குழந்தைகள் இறக்கும் விகிதம் 2001-03 நிதியாண்டுகளில் 301ஆக குறைந்துள்ளது. அதேபோல 1992-93லதகுதிப்பெற்சுகாதாபணியாளர்கள் 33 விழுக்காடு குழந்தை பேற்றை கவனித்த நிலை சற்று உயர்ந்து 2005-06ஆம் நிதியாண்டில் 48.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1988-92 முதல் 1998-2002 -க்கஇடைப்பட்ஆண்டுகளில் 125 -லிருந்து 98 ஆக குறைந்துள்ளது.ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட பெண்கள் எண்ணிக்கை 2002 -லஆயிரத்துக்கு 0.74 என்பதில் இருந்து 2006 -ல் 0.68 அளவுக்கு குறைந்துள்ளது. இதேப்போல எலும்புருக்கி, மலேரியா நோயும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தொலைபேசி, கணினி பயன்பாட்டுக்கு கிடைப்பதும் அதிகரித்துள்ளதாகவும் மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்