ஒரு புது கார் வாங்கும் விலையில், ஒருவர் காரின் பதிவு எண்ணை மட்டும் 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் நடைப்பெற்ற கார் பதிவு எண்ணுக்கான ஏலத்தில், முக்கிய பிரமுகர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள எண்களைப் பெறுவதற்காக பலரும் ஆர்வம் காட்டிய நிலையில் ரோஹித் நாக்பால் என்பவர் 0001 என்ற எண்ணை ரூ.2,72,000 கொடுத்து வாங்கியுள்ளார்.அதற்கு அடுத்தபடியாக 0009 என்ற எண் ரூ.92,000 விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
இந்த வெளிப்படையான ஏலத்தை முதன்முதலாக லுதியானாவில் நடத்திய மாவட்ட போக்குவரத்து அலுவலர்களின் முகங்கள், கார் பதிவு எண்கள் அதிக விலைக்கு போனதால் மகிழ்ச்சியில் திளைத்தது.
பஞ்சாப் மாநில அரசு மூன்று வரிசை எண்களை ஏலத்தில் விடுவதற்காக ஒதுக்கி வைத்திருந்தது. இந்த ஏலத்தில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட 10 முதல் 14 மடங்கு கூடுதல் விலைக்கு கார் பதிவு எண்கள் விற்கப்பட்டுள்ளது. அம்மாநிலஇதனால் அரசுக்கு இதற்கு முன்னர் நடத்திய ஏலத்தின் மூலம் கிடைத்த வருவாயைவிட அதிக வருவாய் கிடைத்துள்ளது என்று அம்மாநில போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் கரம்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
ஏலத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள எண்கள் குறித்து ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், இதற்கான நடவடிக்கைகள் அனைத்து நிலைகளிலும் எடுக்கப்பட்டதாகவும் கூறினார். பல இடங்களில் ஏலம் தொடர்பான விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டதாகவும் சிங் கூறினார்.
ஒற்றைக் கார் பதிவு எண், முக்கிய பிரமுகர்களுக்கான கார் பதிவு எண்களைக் கொண்டவர்களின் சங்கம் ஒன்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. இச்சங்கத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களுத் இந்த ஏலத்தில் பங்கெடுத்ததை பெருமையாக கருதுகின்றனர்.சண்டிகர் மக்கள் தங்கள் கார் எண்கள் பிரபலமானவர்கள் பயன்படுத்தும் எண்ணைப் போன்றோ, சிறப்பு எண்களாகவோ இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். கடந்த ஆண்டு கார் பதிவு எண் ஒன்று ரூ.5,05,000 விலை போனது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தில் கிடைத்த வருவாயைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிறநகரங்களிலும் இது போன்ற ஏலத்தை நடத்த அம்மாநில போக்குவரத்து துறை அலுவலர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.