புதுடெல்லியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வரும் வாஜ்பாயின் வீட்டிற்குச் சென்று அவரின் உடல் நலம் பற்றி கேட்டறிந்த பிரதமர், தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான அத்வானியும் உடன் இருந்தார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வற்புறுத்தி வருகின்ற நிலையில், பிரதமரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.