நிருபர்களாக பணியாற்றப் போகும் "சிறைப் பறவைகள்"

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (15:37 IST)
போபால் மத்திய சிறையில் உள்ள 70 கைதிகள், நிருபர்களாக பணிபுரிய தேவையான பயிற்சி பெற்றுள்ளனர். இப்பயிற்சியை முடித்த கைதிகள் விரைவில் தங்களது பணியை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 70 பேருக்கு போபால் மத்திய சிறைச்சாலையில் செய்தியாளர் பயிற்சியை எக்ஸ்பிரஸ் மீடியா சர்வீஸ் மையம் வழங்கியுள்ளது. 3 மாத கால இந்த சான்றிதழ் படிப்பில் அவர்களுக்கு செய்திகளைச் சேகரிப்பது, எழுதுவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து விடுதலையாகி செல்லும் கைதிகளின் மறுவாழ்வு பணிகளை கருத்தில் கொண்டு போபால் மத்திய சிறை அதிகாரிகள் இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இப்பயிற்சியை முடித்துள்ள பெரும்பாலான கைதிகள் சமூக சீரமைப்பு, அரசியல் சிறையில் வாழ்ந்த நாட்கள் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாக பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த பயிற்சியை முடித்த பெரும்பாலான கைதிகள் உள்ளூர், தேசிய நாளிதழ்களில் எழுதத் தொடங்கியுள்ளனர்.

செய்தியாளர்கள் ஆக பணியாற்றும் போது தவறு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களுடைய இதழியல் கல்விச் சான்றிதழும் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைக் கண்காணிப்பாளர் புருஷோத்தன் சோம்கன்வார் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்