ராஜஸ்தானில் கழுதைகளுக்கு தனி மருத்துவமனை! ஓசி வைத்தியம்!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (17:13 IST)
கழுதைகளுக்கு என்று தனியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்று ராஜஸ்தான் மாநிலம் தந்திலோட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கழுதை உரிமையாளாகளிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

நாட்டில் கழுதைகளுக்கு சிகிச்சை அளிப்பதறக்க சோலாப்பூர், டெல்லி. அகமதாபாத், குவாலியர் ஆகிய இடங்களில் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தந்திலோட் பகுதியில் வசிக்கும் அதிகமான கழுதைகளை கருத்தில் கொண்டு அங்கு கழுதைகளுக்கான சிகிச்சை அளிக்கும் மையம் அடங்கிய சரணாலயம் தொடங்கப்பட்டுள்ளது.

கழுதைகள் எங்காவது நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தால் இந்த மருத்துவ மையத்தைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்திற்கு சென்று கழுதைகளை சிறப்பு ஊர்தியில் அழைத்து வந்து சிகிச்சை அளித்து உரியவரிடம் சேர்க்கின்றனர். இதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்பதாலும், கழுதைகள் இழுக்கும் வண்டி பழுதடைந்தால் அவற்றையும் இந்த மையம் சீர் செய்து கொடுப்பதாலும் இந்த மருத்துவ மையம் அங்கு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு கழுதையின் விலை 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் என்று தெரிவித்த அம்மருத்துவ சிகிச்சை மையத்தின் கால்நடை முருத்துவர் தீபக் தன்வார், கழுதைகளுக்க உடல்நலம் குன்றினால் அவை கவனிப்பாரற்று சாலைகளில் விடப்படுவதாகவும் அதனை பராமரிக்க அதன் உரிமையாளாகளிடம் போதிய நிதி வசதி இல்லை என்றும் கூறினார்.

த‌ற்போது இ‌ந்த மரு‌த்துவ ‌சி‌கி‌ச்சை மைய‌ம் அமை‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளதா‌ல் அ‌ப்பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள கழுதை உ‌ரிமையாள‌ர்க‌ள் ம‌கி‌ழ்‌ச்‌சி‌யி‌ல் உ‌ள்ளன‌ர்.

தா‌ன்லோ‌ட் பகு‌தி‌யி‌ல் மட்டும் நமது நா‌ட்டி‌ல் உ‌ள்ள மொத்த கழுதைகளில் 75 ‌விழு‌க்காடு கழுதைக‌ள் இரு‌ப்பதாக க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ப்பகு‌தி ம‌க்களு‌க்கு வா‌ழ்வாதாரமாக இரு‌ப்பது‌ம், போ‌க்குவர‌த்து‌க்கு‌ம் கழுதைக‌ள் பெ‌ரிது‌ம் பயனு‌ள்ளதாக இரு‌ந்து வரு‌கி‌ன்றன. இ‌ங்கு தொட‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள இ‌ந்த கழுதைக‌ள் சரணாலய மரு‌‌த்துவ மைய‌ம் அ‌ப்பகு‌தி‌யி‌ல் வாழு‌ம் ஏழை-எ‌ளிய ம‌க்களு‌க்கு பெ‌ரிது‌ம் உத‌வியாக இரு‌க்கு‌ம் எ‌ன்பதே ‌நித‌ர்சனமான உ‌ண்மை.

வெப்துனியாவைப் படிக்கவும்