இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ள போதிலும், அது கைவிடப்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெலுடன் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் தேசிய அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிரதமர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது பற்றி கருத்து தெரிவித்த பிரதமர், ஜனநாயக நடைமுறையில் ஆதரிப்பவர்களையும், அரவணைத்து செல்ல வேண்டியது அவசியம் என்றார்.