பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இவை அதிகாரிகளையும், ஊழியர்களையும் நியமிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
இவற்றில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களில் பலர் ஒயுவு பெற்றனர். இவர்களுககு பதிலாக உடனடியாக அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்காத காரணத்தினால் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, அதன் துணை வங்கிகளையும் சேர்த்து 2,700 ஊழியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதே போல் யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, ஆந்திரா வங்கி ஆகியவையும் ஊழியர்களை நியமிக்க முடிவு எடுத்துள்ளன. இந்த வங்கிகள் கீழ் மட்டத்திலும், துணை மேலாளர் மட்டத்திலும் 2 ஆயிரம் பேரை நியமிக்க உள்ளன.
ஆந்திரா வங்கி 734 பேரையும், பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை தலா 400 பேரையும் நியமிக்க முடிவு செய்துள்ளன.
பாரத ஸ்டேட் வங்கி, அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் உட்பட அதன் துணை வங்கிகளுக்கு 20 முதல் 26 வயதிற்குட் பட்டவர்களை ஊழியர்கள் மட்டத்தில் நியமிக்க உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் 6 மாதம் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரம் வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரிகளை நியமித்தது. இவர்கள் ஆறு மாதம் செய்த வேலையில் திருப்தி ஏற்பட்டால், நிரந்தரமாக்க படுவார்கள் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவோ, எழுதவோ தெரியாத காரணத்தினால் , வங்கி பணியை திறமையாக செய்ய முடியவில்லை. தற்போது ஸ்டேட் வங்கி ஆங்கில மொழியில் திறமையுள்ளவ்ர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது என்று இந்த வங்கியின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
தற்பொது பெரும்பான்மையான வங்கிகள், ஆங்கில மொழியில் எழுத, பேச திறமையுள்ளவர்களையே நியமிக்க முடிவு செய்துள்ளன.