ஆ‌ந்‌திரா‌விலு‌ம் ரூ.2‌க்கு ரேஷ‌ன் அ‌‌ரி‌சி: முத‌ல்வ‌ர் ராஜசேகர ரெ‌ட்டி அ‌றி‌வி‌ப்பு!

Webdunia

சனி, 29 செப்டம்பர் 2007 (13:01 IST)
ஏழை மக்களின் பசியைப் போக்குவதற்காகவும், உணவுப் பாதுகாப்பு வழங்குவதற்காகவும் ரேஷன் அரிசியை 2 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்துள்ளோம் எ‌ன்றஆ‌ந்‌திமுதலமை‌ச்ச‌ரராஜசேகரெ‌ட்டி கூ‌றினா‌ர்.

தற்போது ‌நியாய‌‌விலகடைகளில் கிலோ அரிசி ரூ.5.25-க்கு விற்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் 1.70 கோடி பேரிடம் குடு‌ம்ப அ‌ட்டைக‌ள் உள்ளன. அவர்களுக்கு 2.42 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசு ரூ.901 கோடி மானியம் வழங்குகிறது ராஜசேகரெ‌ட்டி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஆந்திராவில் ஏராளமான விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் சில சமயங்களில் உணவுக்கு கூட திண்டாடி வருகிறார்கள். அவர்களை மனதில் கொண்டுதான் கிலோ அரிசி 2 ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இத்திட்டத்தால் அரசுக்கு ரூ. 1913 கோடி செலவாகும். இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் எ‌ன்றா‌ரராஜசேகரெ‌ட்டி.

வெப்துனியாவைப் படிக்கவும்