தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை நீக்கு : பா.ஜ.க ஆர்ப்பாட்டம்!

Webdunia

செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (18:52 IST)
மத்திஅரசிலபங்கு வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்களை நீக்க வேண்டும் என்ற கூறி புதுவமாநில பாரதிய ஜனதா கட்சி நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

இந்த ஆர்ப்பாட்டம் நேரு வீதியில் உள்ள தபால் அலுவலகம் முன்பு நடத்தப்படும் என்று பா.ஜ.க அறிவித்துள்ளது. இது பற்றி பாரதிய ஜனதா கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் எஸ். விஸ்வேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

புதுவை நேரு வீதியில் அமைந்துள்ள தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசில் பங்கு பெற்றுள்ள, தமிகத்தை சேர்ந்த அமைச்சர்களை நீக்க வேண்டும். தமிழக முதல்வர் கருணாநிதி, ராமரை பற்றி கூறிய கருத்துக்களை திரும்பப் பெறவேண்டும். சேது சமுத்திர திட்டத்தை ராமர் பாலத்திற்கு (ஆதம் பாலம்) எந்த பாதிப்பும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்று கூறினார்.

மேலும் அவர், தமிழக முதல்வரின் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்திலும், புதுவையிலும் தி.மு.க வைச் சேர்ந்தவர்கள் பாரதி. ஜனதா கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியகுற்கு கண்டனம் தெரிவித்தார்.

விஸ்வ ஹிந்து பரிசத், சங் பரிவார் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வி. நாராயணசாமி கூறியிருப்பதற்கும் விஸ்வேஸ்வரன் கண்டனம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்