அணு ஒ‌ப்ப‌ந்த‌ம் - புதிய அரசு வரை கா‌‌த்‌திரு‌க்கலா‌ம்: சீதாராம் யெச்சூரி!

Webdunia

ஞாயிறு, 23 செப்டம்பர் 2007 (15:59 IST)
அணு சக்தி ஒப்பந்தத்தில் புதிய அரசின் அணுகுமுறை என்ன என்பதை பார்‌த்து ‌வி‌ட்டு அதன்பிறகு ஓர் முடிவை எடுக்கலாம். அதுவரை காத்திருப்பதில் தவறில்லை எ‌ன்று மா‌ர்‌‌க்‌சிய க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மூ‌த்த தலைவ‌ர் ‌சீதாரா‌ம் யெ‌ச்சூ‌ரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

அமெரிக்காவில் அண்மையில் நடந்த கருத்துக் கணிப்பில் மிகவும் மோசமான அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது பிரதமர் மன்மோகன்சிங், புஷ்ஷை சிறந்த அதிபராக வர்ணித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த 16 மாதங்களில் அதிபர் தேர்தல் வர உள்ளது. இந்தத் தேர்தலில் புஷ் கட்சி தோல்வி அடைவது உறுதி. இதனால் புதிய நிர்வாகம் பதவி ஏற்கும் எ‌ன்று யெ‌ச்சூ‌ரி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் புதிய அரசின் அணுகுமுறை என்ன என்பதை பார்க்கலாம். அதன்பிறகு இதில் ஓர் முடிவை எடுக்கலாம். அதுவரை காத்திருப்பதில் தவறில்லை. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வர சில ஆண்டுகள் ஆகும் என்று அரசு தெரிவித்துள்ளதால் அவசரப்படத் தேவையில்லை என ‌சீதாரா‌ம் யெ‌ச்சூ‌ரி கூ‌றினா‌ர்.

அமெரிக்க அதிபர் இதில் அவசரம் காட்டுவது தன்னை பெரிய ஆளாக உலக அரங்கில் பிரபலப்படுத்திக் கொள்ளத்தான் எ‌ன்றா‌ர் யெ‌ச்சூ‌ரி.

வெப்துனியாவைப் படிக்கவும்