உத்திரப்பிரதேசம் ஆக்ராவில் லாரி மோதி 4 இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியின் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டு, 50 பேர் காயமுற்றத்ன் எதிரொலியாக அம்மாநகர காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆக்ரா நகரின் காவல் கண்காணிப்பாளர் ராகுல் யாடுவேண்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி, ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது தடியடி நடத்திய 13 காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய மக்கள் காவல்துறையின் அத்துமீறலால்தான் வன்முறையில் ஈடுபட்டதாக புகார்கள் வந்ததை அடுத்து உத்திரப்பிரதேச மாநில தலைமைக் காவல் அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில் உள்துறை செயலர் மகேஷ் குப்தா இந்நடவடிக்கையை எடுத்துள்ளார்.
தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆய்வாளர். ஒருவர் போக்குவரத்து ஆய்வாளர். மற்றொருவர் துணை ஆய்வாளர். 5 தலைமைக் காவலர்கள். 5 காவலர்கள் ஆவர்.