பாதசாரிகளை கொல்ல வைக்கப்பட்ட நேர வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது

Webdunia

ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2007 (11:48 IST)
ஹைதராபாத்தில் திரைப்படம் பார்த்து திரும்பும் பாதசாரிகள் அதிகமாகக் கடக்கும் மேம்பாலம் ஒன்றில் செல்பேசி மூலமாக இயக்கி வெடிக்கச் செய்யும் சக்தி வாய்ந்த குண்டை காவல்துறையினர் கண்டுபிடித்து அகற்றியுள்ளனர்.

பிளாஸ்டிக் பை ஒன்றில் சுற்றி பாலத்திற்கு அடியில் வைக்கப்பட்டிருந்த அந்த குண்டு சரியாக இரவு 9.35 மணிக்கு வெடிக்குமாறு பொருத்தப்பட்டிருந்தது. 7.30 மணிக்கு ரூம்பிணி பூங்காவிலும் அடுத்த 5 நிமிடத்தில் உணவகம் ஒன்றிலும் குண்டுகள் வெடித்ததைத் தொடர்ந்து மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்ட ஹைதராபாத் காவல்துறையினர் தில்சுக் நகர் சாலை மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டை கண்டுபிடித்தனர்.

திரைப்படக் காட்சிகள் முடிந்து நூற்றுக் கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கடக்கக் கூடிய முக்கிய பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தின் அனைத்து திரையரங்குகளிலும் காவல்துறையினர் கடுமையான சோதனை அளித்து முடித்தபின்னரே காட்சிகளுக்கு அனுமதி அளித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்