எதிர்ப்பை மீறி அணு ஒத்துழைப்பை முன்னெடுத்தால்... : ஏ.பி. பரதன்!

Webdunia

ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2007 (17:55 IST)
இடதுசாரிகளின் எதிர்ப்பை மீறி இந்திய-அமெரிக்க அணு ஒத்துழைப்பை மத்திய அரசு முன்னெடுத்தால் அதற்கு அரசியல் ரீதியாக 'பெரும் விலை' கொடுக்க வேண்டியிருக்கும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி. பரதன் கூறியுள்ளார்!

இந்திய - அமெரிக்க அணு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மார்க்சிஸ்ட் கட்சிகள் நிராகரித்துள்ள நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பரதன் இவ்வாறு கூறியுள்ளார்.

அணு ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்கும் போதுதான், அமெரிக்காவுடனான அணு ஒத்துழைப்பிற்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பதை காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ளும் என்று கூறிய பரதன், நாளை நடைபெறவுள்ள இடதுசாரி கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து திடமான முடிவு எட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்