தெற்கு மத்திய மும்பைப் பகுதியின் கிராண்ட் சாலையில் உள்ள 5 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததில் கட்டட இடிபாடுகளுக்கு இடையே 5 பேர் சிக்கியுள்ளனர். கிராண்ட் சாலையில் உள்ள கிர்தர் பவன் எனும் 5 மாடிக் கட்டடம் நேற்று இரவு சரிந்து விழுந்தது. கட்டடத்தில் இருந்த 5 பேர் கட்டட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.