ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் : ஜோதி பாசு!

Webdunia

வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007 (14:31 IST)
இந்திய - அமெரிக்க அணு ஒத்துழைப்பிற்கு வழி வகுக்கும் 123 ஒப்பந்தம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், அதற்காக ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஜோதி பாசு கூறியுள்ளார்!

கொல்கட்டாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜோதி பாசு, 123 ஒப்பந்தம் குறித்து தங்களது கட்சியின் அரசியல் தலைமைக் குழு விவாதித்து வருவதாகவும், அது தொடர்பாக கட்சி இறுதி நிலை எடுக்கும் என்றும் கூறினார்.

இந்த ஒப்பந்தம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை ஏற்கனவே தெரிவித்து வி்ட்டோம். ஆனால், அதற்காக ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம். அவ்வாறு செய்தால் மதவாத பா.ஜ.க. ஆட்சிக்கு வர அது வழி செய்துவிடும்.

நாடாளுமன்றத்தில் 123 ஒப்பந்தத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அப்பொழுது மார்க்சிஸ்ட் கட்சி வெளிநடப்பு செய்யும் என்று கூறிய ஜோதி பாசுவிடம், அணு ஒப்பந்தம் குறித்து உங்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேசினாரா என்று கேட்டதற்கு, இல்லை என்று பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்