நிலமோசடி: அசோக் மல்ஹோத்ரா கைது

Webdunia

திங்கள், 6 ஆகஸ்ட் 2007 (16:20 IST)
டெல்லி குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்தது தொடர்பாக அசோக் மல்ஹோத்ராவை மத்திய புலனாய்வுப் பிரிவு இன்று கைது செய்துள்ளது.

இது தொடர்பாக மல்ஹோத்ராவின் வீட்டில் மத்திய புலனாய்வுப் பிரிவினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதில் அவர் நில மோசடியில் ஈடுபட்டதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து விசாரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவினர் மல்ஹோத்ராவை அழைத்தனர். ஆனால் அதை அவர் மறுத்து வந்தார். இந்நிலையில், ஆக்ராவில் இருந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வந்தபோது, அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்த மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவரை இன்று கைது செய்தனர்.

சட்ட நிபுணர்கள் முன்னிலையில் தம்மிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் சரண் அடையத் தயார் என்று அசோக் மல்ஹோத்ரா அந்த செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

நில மோசடியில் தமக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், மத்திய புலனாய்வுப் பிரிவு தம்மை குறிவைத்து விட்டாதாக தெரிவித்தார்.

மத்திய புலனாய்ப் பிரிவு அசோக் மல்ஹோத்ராவிற்கு எதிராக பிணைய விடுதலையில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்திருப்பது குறிப்பிடதக்கதாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்