கோவா: பாஜக ஆட்சி அமைக்குமா?

Webdunia

ஞாயிறு, 29 ஜூலை 2007 (15:52 IST)
மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு கோவா முதலமைச்சர் காமத்துக்கு ஆளுநர் எஸ்.சி.ஜமீர் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, நாளை கோவா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

கோவா மாநிலத்தில் திகம்பர் காமத் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை மராட்டிய வாடி சோமந்த கட்சி, ஒரு சுயேட்சை உள்பட 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் திரும்பப் பெற்றனர். இதனால் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.

இந்நிலையில், எதிர்க்கட்சியான பாஜக.விற்கு மராட்டிய வாடி சோமந்த கட்சி, சுயேட்சை ஆதரவு அளித்துள்ளதால் பாஜக தலைமையிலான கோவா ஜனநாயக கூட்டணிக்கு 20 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து, கோவாவில் ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இதற்காக நேற்று அக்கூட்டணில் 20 சட்டப்பேரவை உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் முன் அணி வகுத்தனர். சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் நாளை மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு கோவா முதலமைச்சர் காமத்துக்கு ஆளுநர் எஸ்.சி. ஜமீர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நாளை காலை கோவா சட்டப்பேரவை கூடியதும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்