பிரதமர், சோனியா மீதான வழக்கு தள்ளுபடி

Webdunia

ஞாயிறு, 29 ஜூலை 2007 (13:33 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலின்போது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டோர் விருந்தளித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை பாட்டியாலா நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், இடது சாரி கட்சித் தலைவர்கள் பிரகாஷ் கராத், ஏ.பி.பரதன் உள்ளிடோர் கடந்த 17 ஆம் தேதி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விருந்து அளித்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களது வேட்பாளரான பிரதிபா பாட்டீலுக்கு ஆதரவாக வாக்குகளைப் பெறவே இந்த விருந்தை அவர்கள் அளித்தாக கூறி ரவீந்தர் குமார் என்பவர் பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் தொடர்பான எந்த பிரச்சனையையும் உச்ச நீதிமன்றம் தான் கையாள வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்