பீகாரில் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலி : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Webdunia

வெள்ளி, 27 ஜூலை 2007 (18:00 IST)
பீகாரில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கங்கா, பாக்மதி, பூரி, சிடமார்ஹி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏறபட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு காரணமாக முஷாப்பர்பூர், சகர்சா, சுபாயுல், மதுபாணி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு காரணமாக ரயில் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி இருப்பதால் பேருந்து போக்கு வரத்தும் பல பகுதிகளில் தடைபட்டு உள்ளது. பீகார் மாநிலத்தில் இதுவரை வெள்ளப் பெருக்கிற்கு 14 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்