மும்பை தொடர் குண்டு வெடிப்பு : டைகர் மேமன் சகோதரருக்கு தூக்கு

Webdunia

வெள்ளி, 27 ஜூலை 2007 (14:08 IST)
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான டைகர் மேமன் சகோதரர் யாகுப் மேமனுக்கு மரண தண்டனை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் கொல்லப்பட்டனர். 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 100 பேர் குற்றவாளிகள் என மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

குற்றவாளிகளுக்கான தண்டனையை மும்பை தடா நீதிபதி கோடே படிப்படியாக வழங்கி வருகிறார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான டைகர் மேமன் சகோதரர் யாகுப் மேனனுக்கு மரண தண்டனை வழக்கி இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

மும்பையின் பல பகுதிகளில் தொடர் குண்டு வெடிக்கச் செய்ய உதவியதற்காவும், அதற்கான பண உதவிகள் செய்து கொடுத்ததிற்காவும் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதி கோடே தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

அதேபோல் இநத வழக்கில் குற்றவாளிகளான யூசுப், ஈசா, ரூபினா ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பட்டது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு வருகிற 31 தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்