2006-07 ஆண்டிற்கான வருமான வரி விவரங்களை தாக்கல் செய்வதற்கு 40 சிறப்பு கவுண்ட்டர்களை திறக்கப்படும் என்று வருமான வரித்துறை தலைமை ஆணையர் கூறியுள்ளார்!
வருமான வரி விவரங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிகிறது. இதனையொட்டி கடைசி 4 நாட்களில் விவரங்களை தாக்கல் செய்வோர் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும் என்பதால் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை சனி, ஞாயிறு கிழமைகள் உட்பட சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இந்த 40 சிறப்பு கவுண்ட்டர்கள் இயங்கும் என்று தலைமை ஆணையர் சி.ஆர். ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
விவர படிவங்களை பெறுவதற்காக அமைக்கப்படும் கவுண்ட்டர்கள் தவிர, மற்ற விசாரணைகளுக்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
வருமான வரி விவரங்களை தாக்கல் செய்வோர் தங்களுடைய PAN எண்ணை குறிப்பது மட்டுமின்றி, நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக இருந்தால் அந்நிறுவனத்தின் TAN எண்ணையும், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் MICR குறியீட்டையும் தவறாமல் குறிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.