போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றுள்ள மோனிகா பேடி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
சென்சல்குடா பெண்கள் சிறைச்சாலையில் இருந்து மோனிகா பேடி பிணைய விடுதலையாகி இன்று வெளியே வந்தார்.
சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து ஆஜர்படுத்தப்பட்ட மோனிகா பேடிக்கு நீதிமன்றம் பிணைய விடுதலை அளித்திருப்பதை அடுத்து, நீதிமன்றத்தில் இருந்து மோனிகா பேடி தனது தந்தையுடன் புறப்பட்டுச் சென்றார்.
கடந்த 19ஆம் தேதி மத்திய புலனாய்வுக் கழக நீதிமன்றம் மோனிகா பேடி தனது கடவுச் சீட்டை ஒப்படைத்தால் தான் பிணைய விடுதலை அளிக்கப்படும் என்று கூறிவிட்டது. ஆனால் சிறப்பு மத்திய புலனாய்வுக் கழக நீதிமன்றம் கடவுச் சீட்டு ஒப்படைக்காமலேயே நேற்று மோனிகாவிற்கு பிணைய விடுதலை அளித்து உத்தரவிட்டது.
தாதா அபு சலீமின் காதலியும், நடிகையுமான மோனிகா பேடி, கடந்த 2002ஆம் ஆண்டு போர்ச்சுக்கலில் அபு சலீமுடன் பிடிபட்டார்.