தொலைக்காட்சியில் புகைத்தல், குடித்தல் போன்ற காட்சிகள் இடம்பெறும் நிகழ்ச்சிகளை ஏ சான்றளிக்கும் வகையில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட உள்ளது.
மேலும், வயது வந்தோர்களுக்கான நிகழ்ச்சிகளை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஒளிபரப்ப அனுமதிப்பது என்றும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
புகை பிடிப்பதை ஊக்குவிக்கும் காட்சிகளும். அதனால் ஏற்படும் தீங்குகளை எடுத்துக் கூறாத நிகழ்ச்சிகளும் ஏ பிரிவில் கொண்டு வரப்படும் என்று செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சத்தின் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மழைக்காலக் கூட்டத் தொடரில் இது குறித்து சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என்றும், யு மற்றும் எஸ் வகை நிகழ்ச்சிகளை எப்போதும் ஒளிபரப்பலாம். யு/ஏ வகை நிகழ்ச்சிகளை இரவு 8 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஒளிபரப்ப அனுமதிக்கலாம் என்றும் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.