குடியரசு துணைத் தலைவர் : ஹமீத் அன்சாரி இடது பரிந்துரை!

Webdunia

வெள்ளி, 20 ஜூலை 2007 (16:04 IST)
PIB PhotoPIB
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேச சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஹமீத் அன்சாரியின் பெயரை இடதுசாரிகள் பரிந்துரைத்துள்ளனர்!

இந்திய அரசுப் பணியில் அனுபவம் பெற்றவரான ஹமீத் அன்சாரி, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக பணியாற்றியுள்ளவர். ஹமீத் அன்சாரியை தங்களது முதல் தேர்வாக பரிந்துரைத்துள்ளதாக இடதுசாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை நேற்று இரவு சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், நாடாளுமன்ற கட்சித் தலைவர் சீதாரம் யச்சூரி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

அப்பொழுது குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த ஹமீத் அன்சாரியை முன்மொழிந்ததாக இடதுசாரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறவுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகளின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஹமீத் அன்சாரியின் பெயரை இடதுசாரிகள் முன்மொழிவார்கள் என்று மூத்த இடதுசாரி தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்